JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

ஒரு கப் காபி பலரது டைப் 2 நீரிழிவு நோயை குறைக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அன்றாடம் இரண்டு கப் அல்லது அதற்கு மேல் குடிப்பது பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்களின் அபாயத்தை குறைப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காபியில் காஃபின் எனும் பொருள் நிறைந்து இருக்கிறது. இதனை நாம் எடுத்துக் கொள்வதால் உடலில் இருக்கும் கொழுப்புகள் குறையும். ஆகவே, இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.
இவ்வாறு காபி குடிப்பது உங்கள் உடல் எடையை நிர்வகிக்க உதவும். ஒரு கப் காபி குடித்தால் மனச்சோர்வு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். காஃபியில் இருக்கும் காஃபின் எனும் பொருளானது பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக கூறப்படுகிறது.
அவர்களது கட்டுப்பாடற்ற இயக்கங்களை இது சரிப்படுத்துமாம். ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கப் காபி குடித்தால் டிமென்ஷியா அல்சைமர் நோய் ஏற்படுகின்ற அபாயமானது குறைவதாக கூறப்படுகிறது.
அன்றாடம் 400 மில்லி கிராம் அளவு காபி குடிப்பது ஆரோக்கியமானதாக சுகாதார வல்லுனர்கள் கூட தெரிவிக்கின்றனர். பால் கலக்காத காப்பியை குடிப்பது உடல் எடை குறைய வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment