Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 5, 2023

தினமும் ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!! இந்தநோய்யெல்லாம் உங்களை நெருங்கவே நெருங்காது!!



பச்சை மிளகாய் அதிகம் காரம் நிறைந்ததால் சிலரது வீட்டில் வயிற்று புண் வந்து விடும் என்ற காரணத்தினால் பெரும்பாலும் பயன்படுத்த மாட்டார்கள்.ஆனால் தினமும் ஏதோ ஒரு விதத்தில் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக் கொண்டால் நம் உடலில் பல்வேறு நன்மைகள் கிடைக்க பெறும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?ஆம் நாம் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு பச்சை மிளகாயில் சத்துக்கள் நிறைந்துள்ளன.
பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலிலிருக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் அதில் இருக்கும் சத்துக்களை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

பச்சை மிளகாயில், புரதம் கொழுப்பு கால்சியம் வைட்டமின் ஏ மற்றும் சி இரும்புச்சத்து நார்ச்சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

தோராயமாக ஒரு பச்சை மிளகாயில்

கால்சியம் 30 மில்லி கிராம்

கொழுப்பு 0.6 கிராம்

புரதம் 2.9 கிராம்

நார்ச்சத்து 6.8 கிராம்

இரும்பு சத்து 4.4 கிராம்

விட்டமின் ஏ 176 மியூஜி

விட்டமின் சி 111 மில்லி கிராம்.

பச்சை மிளகாயை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!

பச்சை மிளகாயில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.மேலும் பச்சை மிளகாய் ஜீரணத்திற்கு பெரிதும் உதவுகிறது.

தினமும் காரம் நிறைந்த பச்சை மிளகாயை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் மூளை நரம்புகள் மற்றும் உடல் சுறுசுறுப்பு அடைகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு பச்சை மிளகாயாவது உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.

தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்வதால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

ரத்த சோகை நோய் உள்ளவர்கள் தினமும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டால் அதில் இருக்கும் இரும்பு சத்தின் காரணமாக ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.

பச்சை மிளகாயில் அதிக அளவு நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளதால் தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான நோய்களிலிருந்தும் நம்மை காக்கும்.

அல்சர், வயிற்று வலி,நெஞ்சு எரிச்சல்,வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பச்சை மிளகாயை எடுத்துக் கொள்வது தவிர்க்க வேண்டும்.இவர்களை தவிர்த்து மற்றவர்கள் ஏதாவது ஒரு வகையில் உணவில் தினமும் பச்சை மிளகாயை சேர்த்துக் கொண்டால் நாம் பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment