JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

குளிர் காலங்களில் ஏற்படும் வறட்டு இருமல் அல்லது நீண்ட நேரம் வரட்டு இருமல் இருபது ஆகியவற்றை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.
தற்போது உள்ள சூழலில் குளிர்காலங்களில் ஏற்படக்கூடிய வறட்டு இருமல் அல்லது நீண்ட நாள் வரட்டு இருமல் சளி தொண்டைப்புண் ஆகியவற்றை குணப்படுத்தும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வித செலவுமின்றி சரி செய்து கொள்ளும் வழிமுறைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.
வரட்டு இருமலை மிக விரைவில் குணப்படுத்தும் மருந்தாக தேன் உள்ளது. இதில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.இவை நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை ஏற்படுத்துகிறது.
ஒரு கப் பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து பருகி வருவதன் காரணமாக தொண்டை பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் முற்றிலும் குணமடைந்து வறட்டு இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாத்துக் கொள்கிறது.
ஒரு டீஸ்பூன் சோம்பு ஒரு டீஸ்பூன் பட்டை மட்டும் அரை ஸ்பூன் பொடி ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் பிறகு வடிகட்டி அதனை பருகி வருவதன் காரணமாக இருமல் பிரச்சனை குணமடையும். இரண்டு ஸ்பூன் வெங்காயச் சாறு, ஒரு ஸ்பூன் தேன் ஆகிய இரண்டையும் கலந்து பருகி வருவதன் காரணமாக நீண்ட நாள் இருக்கும் வறட்டு இருமல் முழுமையாக குணமடைய உதவும்.
இரண்டு ஸ்பூன் தேன் ஒரு ஸ்பூன் தேங்காய் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் சிறிதளவு வெப்பப்படுத்தி அதன்பிறகு பருகி வருவதன் காரணமாக வரட்டு இருமல் குணமடையும். வரட்டு இருமலை குணப்படுத்தும் பண்புகள் கற்றாழையில் அதிகப்படியாக நிறைந்துள்ளது.
இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. நுரையீரல் பகுதிகளில் சேதமடைந்த திசுக்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. இரண்டு ஸ்பூன் தேனுடன், கற்றாழை ஜூஸ் கலந்து பருகி வருவதன் காரணமாக பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. முக்கியமாக வறட்டு இருமலை குணப்படுத்த உதவுகிறது.
No comments:
Post a Comment