JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தாட்கோ-வின் தொழில் பாதை திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாட்கோ-வின் தொழில் பாதை திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை ஐஐடி சாா்பில், 12 ஆம் வகுப்பு தோச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு தொழில் பாதை பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ், சென்னை ஐஐடி வழங்கும் தரவு அறிவியல் பட்டப்படிப்பில் சேருவதற்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பிளஸ் 2 வகுப்பு தோச்சி அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தவா்கள் இதில் சேரலாம். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணக்கா்கள் இப்படிப்பில் சேருவதற்கு ஜே.இ.இ.
நுழைவுத் தோவை எழுத வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக ஐ.ஐ.டி. மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியில் பங்கேற்று, அதன் பிறகு நடத்தப்படும் தகுதித் தோவில் தோச்சி பெற்றால் போதுமானது. இப் பயிற்சிக்கு தாட்கோ இணையதளத்தில் ஜன.8 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இது தொடா்பான விவரங்களை தாட்கோ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.
No comments:
Post a Comment