Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 7, 2023

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடிப்பதால் உண்டாகும் அதிசயம்

நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆன பிறகு ,கழிவுகள் உடலை விட்டு வெளியேறாமல் தேங்கினால் அது நோயாக உருவாகும் .அதனால் அந்த கழிவுகளை சிலவகை வீட்டு வைத்தியத்தின் மூலம் வெளியேற்றுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம் .இஞ்சியை மைய அரைத்து சாப்பிட்டாலோ அல்லது இஞ்சி டீ போட்டு குடித்தாலோ அந்த நச்சுக்கள் வெளியேறி விடும் .முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் மூலம் அந்த நச்சுக்கள் வெளியேறும்.மேலும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்

1.காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி உடல் புத்துணர்வுடன் இருக்கும் .


2.இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் குடல் சுத்தமாகி விடும்.

3.நாம் சாப்பிடும் உணவில் ஆர்கானிக் முறையில் கிடைத்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.

4.கற்றாழை ஒரு நச்சுக்களை வெளியேற்றும் பொருளாகவும் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. 

இதன் இலையில் உள்ள சதைப்பற்று பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வந்தாலும் கழிவுகள் வெளியேறும்

No comments:

Post a Comment