JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான காலை வணக்கம். எண்ணும் எழுத்தும் திட்டத்தை பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் அனைவரும் வகுப்பறையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
அனைத்து ஆசிரியர்களையும் ஒரே சமயத்தில் அங்கீகரிக்க இயலாத காரணத்தால் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் முதற்கட்டமாக மாநில கருத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டு அங்கீகரிக்கப்பட உள்ளார்கள்.இதில் விடுபட்டுள்ள மாநில கருத்தாளர்களின் பெயர் நிச்சயம் சேர்க்கப்பட்டுவிடும்.
இதே போல் அடுத்த கட்டமாக இனிவரும் நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளில் மாவட்ட கருத்தாளர்கள் அங்கீகரிக்கப்பட உள்ளார்கள். அதற்கு அடுத்த கட்டமாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , வட்டார வள ஆசிரிய பயிற்றுநர்கள், எண்ணும் எழுத்தும் திட்டத்தை வகுப்பறையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்கள் என அனைவரும் மாவட்ட அளவில் அல்லது வட்டார அளவில் நிச்சயம் அங்கீகரிக்கப்படுவீர்கள் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அனைத்து ஆசிரியர்களுக்குமான அங்கீகாரம் கண்டிப்பாக வழங்கப்படும்.
- EE Team
No comments:
Post a Comment