Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 2, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.02.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

பொருள்:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.

பழமொழி :

Face the danger boldly than live with in fear.
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.

பொன்மொழி :

தொலைவில் இருப்பதைப் பார்த்துத் தயங்குவதில் பயன் எதுவுமே இல்லை. அருகில் இருப்பதைச் செய்து முடிப்பதே தலையாய பணி.

பொது அறிவு :

1. கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார் ?

 H.டேவி, 1808.

 2. அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? 

 F.ஹோலர், 1827.

English words & meanings :

when you bring ant from another country it is - import(+)ant - important 

ஆரோக்ய வாழ்வு :

இதய நோய் அபாயத்தை குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. வெங்காயத்தில் உள்ள தியோசல்பினேட்டுகள் ஆபத்தான கட்டிகள் உருவாகுவதை தடுக்கிறது.
இதிலுள்ள அல்லிசின் நைட்ரிக் ஆக்சைடை வெளியிடுவதன் மூலம் இரத்த நாளங்களின் விறைப்பைக் குறைத்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 

NMMS Q

விடுபட்ட எண்ணைக் காண்க: 2,5,9,19,37, ?

 விடை: 75. 

விளக்கம்: 2x2+1 =5; 5x2-1 = 9; 9x2+1=19; 19x2-1=37; 37x2+1=75; 

 பிப்ரவரி 02


உலக சதுப்பு நில நாள் 

உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.

அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

நீதிக்கதை

கல்வியின் பெருமை

பண்ணையார் ஒருவர் தன் ஆறு வயது மகனுடன் ஆசிரியரிடம் வந்தார். இவன் என் ஒரே மகன். இவனுக்கு நீங்கள் கல்வி கற்றுத்தர வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு ஆசிரியர், நூறு பணம் தாருங்கள். நன்றாக கல்வி கற்றுத் தருகிறேன். இவன் பேரும், புகழும் பெற்று விளங்குவான் என்றார் ஆசிரியர்.

ஆ! நூறு பணமா? அந்தப் பணத்திற்கு நல்ல ஒரு எருமை மாடு வாங்கலாமே என்றார் பண்ணையார். வாங்குங்கள். உங்கள் பண்ணையில் ஐம்பத்து இரண்டு எருமை மாடுகள் உள்ளன. இப்படி மற்றவரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம் என்றார். 

ஆசிரியரான உங்களுக்குக் கணக்கு தெரியாதா? என்னிடம் ஐம்பது மாடுகள் உள்ளன. ஒரு மாடு சேர்ந்தால், ஐம்பத்து ஒன்று தானே ஆகும். எப்படி ஐம்பத்து இரண்டு வரும்? மாடுகள் கணக்கில் உங்கள் மகனைச் சேர்க்கவில்லையே அவனையும் சேர்த்தால் ஐம்பத்து இரண்டு ஆகும். 

என் மகனை மாடுகள் கணக்கில் சேர்க்க அவன் என்ன மாடா? இப்படி பேச உங்களுக்கு என்ன துணிச்சல்? என்று கோபத்துடன் கேட்டார் பண்ணையார். கல்வி கற்றவன் மனிதன். படிக்காதவன் மாடு, மரம் போன்றவன். இது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார் ஆசிரியர்.

என்னை மன்னியுங்கள். கல்வியின் பெருமையை உங்களால் தெரிந்து கொண்டேன். நீங்கள் கேட்ட பணம் தருகிறேன். இவனுக்கு நன்றாக கல்வி கற்றுத் தாருங்கள். சிறந்த மனிதனாக இவனை மாற்றுங்கள் என்றார் பண்ணையார். அப்படியே செய்கிறேன் என்றார் ஆசிரியர்.

நீதி :
மனிதனுக்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம்.நிலையான வளர்ச்சிக்கு கல்விதான் சிறந்த கருவியாகும். 

இன்றைய செய்திகள்

02.02.2023

* நிலையான வளர்ச்சிக்கு கல்விதான் சிறந்த கருவியாகும். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தரமான கல்வியை உருவாக்க வேண்டும் என்று ஜி20 கல்வி மாநாட்டில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தல்.

* தமிழகம் முழுவதும் விரைவில் காலை உணவுத் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி.

* வங்கக்கடலில் புயல் சின்னம்: மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை.

* மத்திய பட்ஜெட் 2023-24-ல் பெண்களுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

* 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

* பாகிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 100 ஆக அதிகரிப்பு.

* ஆசிய உள்ளரங்க தடகள போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

* ஐசிசி டி20 தரவரிசை: புதிய உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்.

Today's Headlines

* Education is the best tool for sustainable development.  IIT Chennai Director Kamakody stressed that all countries should work together to create quality education at the G20 Education Conference.

 * Breakfast program across Tamil Nadu soon: Chief Minister Stalin assured.

 * Storm warning in Bay of Bengal: Fishermen banned from fishing in Gulf of Mannar.

* Union Budget 2023-24 Announces New One Time Saving Scheme for Women

* Andhra Pradesh Chief Minister Jagan Mohan Reddy has announced that Visakhapatnam will be the new capital of Andhra Pradesh.

 * Union Finance Minister Nirmala Sitharaman presented the budget for the financial year 2023-24 in the Lok Sabha yesterday.

* Death toll rises to 100 in Pakistan mosque blast. 

*   26 Indian sportsmen will be competing in the Asian Indoor Athletic meet.

 * ICC T20 ranking list : Indian cricketer Suryakumar Yadav set a new record. 

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment