JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இங்கு பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் பைல்ஸ்.
ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது, மன அழுத்தம், புகைப்பிடித்தல், மதர் முதல் என பல காரணங்களினால் பைல்ஸ் உண்டாகிறது.
இது பலருக்கும் குணமாகாமல் அறுவை சிகிச்சை வரை சென்றடைகிறது. இதனை ஆரம்ப கட்ட காலத்திலேயே கண்டுபிடித்தால் மிகவும் சுலபமாக குணப்படுத்தி விடலாம். அந்த வகையில் இந்த பதிவில் வருவதை தொடர்ந்து வாரத்தில் மூன்று நாட்கள் பின்பற்றினால் போதும் உடனடி தீர்வை காணலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம்
பச்சை கற்பூரம் -சிறு துண்டு
செய்முறை:
நாம் எடுத்துக் கொண்டுள்ள வாழைப்பழம் நன்றாக பலமாகவோ அல்லது மிகவும் காயாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறு எடுத்துக் கொண்ட வாழைப்பழத்தை தோல் உரித்து விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு வெட்டி வைத்துள்ள வாழைப்பழத்தில் பச்சை கற்பூரத்தை சிறிதளவு உடைத்து அனைத்து வாழைப்பழ துண்டுகளின் மையப்பகுதியில் வைக்க வேண்டும். இதனை தினம்தோறும் வெறும் வயிற்றில் காலைக்கடன் முடித்தவுடன் சாப்பிட்டு வர வேண்டும்.
இதனை சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கு வேறு எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல் நாம் உணவு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு வாரத்தில் மூன்று முறை செய்து வர நல்ல மாற்றத்தை காண முடியும்.
No comments:
Post a Comment