JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

மிளகில் உள்ள அதிகப்படியான மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
மிளகு சித்த மருத்துவத்தில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தக் கூடியது. சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு ஏற்படும் சளி, இருமல்,காய்ச்சல், சைனஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றைகளை முற்றிலும் குணமடைய உதவும். இவ்வாறு பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.இதனைப் பற்றி விரிவாக இந்த பதிவு மூலமாக காணலாம்.
ஒரு கையளவு மிளகினை நன்றாக காயவைத்து அதன் பிறகு பொடி செய்து ஒரு ஸ்பூன் வெந்நீர் அல்லது ஒரு டம்ளர் பால் ஆகியவற்றில் கலந்து பருகுவதன் காரணமாக சளி, இருமல் போன்ற பாதிப்புகளிலிருந்து குணமடைய உதவுகிறது.
ஒரு ஸ்பூன் மிளகு பொடி 300 மிலி நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதன் பிறகு வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகி வருவதன் காரணமாக அதிகப்படியான இருமல், நெஞ்சு சளி, தொண்டை கரகரப்பு, அலர்ஜி தீராத சளி போன்ற பாதிப்புகளில் இருந்து உடனடியாக குணமடைய உதவுகிறது.
No comments:
Post a Comment