நமக்கு செரிமான பிரச்சனை எதுவும் இல்லாமல் நாம் உண்ட உணவு முழுமையாக ஜீரணமானால்தான் மலச்சிக்கல் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் வரவே வராது. அப்போதுதான் நாம் மிகவும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
இந்த பிரச்சனைகள் இருந்தால் அது நம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். நம் உண்ட உணவின் மிச்சம் மீதி உணவுக்குழலில் தங்குவதால் தான் மலச்சிக்கல் பிரச்சனை தொடர்ந்து ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினைகளை சரி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.
வீட்டிலேயே செரிமானமின்மை மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு எளிய பானம் ஒன்றை தயார் செய்யும் முறையை பார்ப்போம்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் சீரகம் போடவும். இது 3-4 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வேண்டும்.
இந்த சீரகத்தில் இதில் மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இத்தனை ஊட்டச்சத்துகளும் இதில் அடங்கியுள்ளன.
நன்கு கொதி வந்ததும் நிறம் மாறியதும் அதை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். இதில் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர் சிறிது இந்து உப்பு சேர்க்கவும். உங்களுக்கு சர்க்கரை வியாதி இல்லை எனில் இதில் ஒரு ஸ்பூன் தேன்கூட உப்பிற்கு பதிலாக சேர்க்கலாம்.
இதை இரவு படுக்கும் முன்பு அரைமணி நேரத்திற்கு முன்னால் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் அது நமது உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும். செரிமானமின்மை, மலச்சிக்கல் வரவே வராது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைப்பதோடு மாரடைப்பை கிட்ட நெருங்கவே விடாது.
No comments:
Post a Comment