JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 11,409 பணி காலியிடங்களை நிரப்புவதற்கான எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் 11,409 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் எஸ்எஸ்சி வெளியிட்டது. அLன்படி, எம்டிஎஸ் போட்டித் தோ்வு வரும் ஏப்ரல் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இத்தோ்வு முதல்முறையாக தமிழ் மொழியில் நடைபெறுகிறது.
முதல் கட்டத் தேர்வில் 40 வினாக்களும், இரண்டாம் கட்டத் தேர்வில் 50 வினாக்கள் என மொத்தம் 90 வினாக்கள் கேட்கப்பட்டும். ஒவ்வொரு வினாவுக்கும் 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த தோ்வுக்கு தகுதியானவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பிப்ரவரி 17-ஆம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இறுதி நாளில் இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர்.
இதையடுத்து மேற்கண்ட பணி காலியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் இந்த வாய்ப்பினை நழுவவிடாமல் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.
மேலும் இதுகுறித்து விவரங்கள் அறிய https://ssc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment