JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (Employees' Provident Fund Organisation) காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பொதுவாக, ஐஏஎஸ் , குரூப் 1, வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெரும்பாலான தேர்வர்கள் இந்த தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் இதர தேர்வுகளோடு ஒத்து போவாதால், தேர்வர்கள் EPFO அறிவிப்புக்கு ஒரு வகையான எதிர்பார்ப்பு எப்போதுமே இருந்து வருகிறது. மேலும், குரூப் 1, ஐஏஎஸ் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு இதில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
காலியிட விவரம்:
பதவி காலியிடங்கள்
Enforcement officer/ Accounts officer 418
Assistant Provident Fund Commissioner 159
இதற்கான விண்ணப்பங்களை upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் 25ம் தேதியில் இருந்து தொடங்கும். இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். கல்வித் தகுதி, வயது வரம்பு, கட்டணம், தேர்வு முறை, கடைசி தேதி, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை யுபிஎஸ்சி அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்படும்.
No comments:
Post a Comment