Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 6, 2023

கட்டுக்கடங்காமல் சுகர் ஏறுதா? இதையெல்லாம் தினமும் சாப்பிடுங்க, உடனே குறையும்!!

நீரிழிவு நோய்க்கான உணவுகள்: நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நோய்களில் ஒன்றாக உள்ளது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சரியாக கண்காணிக்கப்படாவிட்டால், இந்த நோய் பலருக்கு ஆபத்தானதாகக்கூடும். தவறான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக, உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. சர்க்கரை அளவு அதன் உயர் மட்டத்தை அடைந்தவுடன், பல தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.

நீரிழிவு நோய்என்பது ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனையாகும். இது ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர், தனது உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் இரத்த சர்க்கரை எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம், அல்லது குறையலாம். இதனால் அவர்களது ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். சர்க்கரை நோயாளிகள் இயற்கையான வழியிலும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். தினசரி உணவில் சில உணவுகளை சேர்த்துக்கொண்டால், எளிதாக சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். இந்த சூப்பர்ஃபுட்களில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான உணவுகள் இதோ:

வாழை

நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு சாப்பிடக்கூடிய ஒரு பழமாகும். வாழைப்பழத்தை குறைந்த அளவில் சாப்பிட்டு வந்தால், அது நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. தினமும் காலை அல்லது மாலை ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.

பீட்ரூட்

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள உணவுகளில் பீட்ரூட் சேர்க்கப்பட்டுள்ளது. வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து இதில் நல்ல அளவில் காணப்படுகின்றன. மேலும், பீட்ரூட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் செல் சேதத்தை தடுக்க உதவுகிறது.

தக்காளி

வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் போன்ற பண்புகள் கொண்ட தக்காளி ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். சர்க்கரை நோயாளிகள் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தக்காளியை கறி, சூப், சாலட் அல்லது கஞ்சி போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம்.

ஆளி விதைகள்

பல விதைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அவற்றில் ஒன்றுஆளி விதைஆகும். இந்த விதைகள் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகக் கருதப்படுகின்றன. மேலும், ஆளிவிதைகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும். இதன் காரணமாக அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

உலர் பழங்கள்

பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் போன்றவை ஆரோக்கியத்தை மேம்படுத்த உண்ணக்கூடிய உலர் பழங்களாகும். இந்த உலர் பழங்களில் நல்ல அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. உலர் பழங்கள் இரத்த சர்க்கரையை குறைப்பதில் மட்டுமல்ல, கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment