Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 15, 2023

1138 ஆதிதிராவிட பள்ளிகள் கல்வித் துறையில் இணைப்பு

மாநிலம் முழுதும் உள்ள 1138 ஆதிதிராவிட பள்ளிகளை வரும் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வி துறையுடன் இணைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறை பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத் துறை ஹிந்து சமய அறநிலைய துறை வனத் துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வி துறையுடன் இணைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு துறையும் மேற்கொண்டுள்ளது.

இந்த வரிசையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1138 பள்ளிகள் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிக் கல்வி துறையில் இணைக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத் துறை அறிவித்துள்ளது.

இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள் தொகுப்பூதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் விபரங்களை தாக்கல் செய்யுமாறு ஆதிதிராவிட நலத் துறை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அதன் இயக்குனர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment