JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
12 மணிநேர வேலை சட்ட மாசோதாவை திரும்பப் பெறக்கோரி வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மே 12ல் தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர தொழிற்சாலை வேலை நேர சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஐடி நிறுவனங்களுக்கு 12 மணி நேர வேலை அனுமதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டிலும் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் தனியார் தொழிற்சாலை வேலை நேர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஐடி நிறுவனங்கள் சில வைத்த கோரிக்கை காரணமாகவும், உற்பத்தியை பெருக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் இந்த முறையை கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதற்கு முன் 8 மணி நேரத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்ற விதி நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த சட்டப்படி 12 மணி நேரம் என்பது கட்டாயம் கிடையாது. அதாவது 12 மணி நேரம் வேண்டாம் என்றால் ஊழியர்கள் தங்கள் நிறுவங்களிடம் மறுக்க முடியும், என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் 12 மணி நேர வேலை சட்ட மசோதா காரணமாக வேலை செய்யும் நாட்கள் 4 ஆக குறையும். 3 நாட்கள் விடுமுறை நாட்களாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளன.
இதை தற்போது திமுக கூட்டணி கட்சிகளே சட்டசபையில் எதிர்த்து உள்ளன. தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை சட்டசபையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
தொழிலாளர் நலனுக்கு எதிராக இருப்பதாகவும், மக்களின் அடிப்படை வாழ்க்கையை இது பாதிக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளனர். இந்த சட்ட மசோதா விற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள், விசிக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
திமுக நிறைவேற்றிய மசோதாக்களை கடந்த இரண்டு வருடத்தில் அதன் கூட்டணி கட்சிகள் எதுவும் எதிர்க்காத நிலையில் முதல் முறையாக இந்த நிறைவேற்றப்பட்ட மசோதாவை கூட்டணி கட்சிகள் எதிர்த்து உள்ளன.
கடந்த 2 வருடத்தில் எந்த சட்டத்தையும் திமுக கூட்டணி கட்சிகள் ஒன்றாக எதிர்க்கவில்லை. அவையில் இருந்தும் வெளிநடப்பு செய்யவில்லை.
இந்த சட்டத்தை காங்கிரஸ், மதிமுக, மமக, தவாக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
12 மணிநேர வேலை சட்ட மாசோதாவை திரும்பப் பெறக்கோரி வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 12ல் தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டு உள்ளது. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இன்று சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாசோதாவிற்கு எதிராக வரும் 27ம் தேதி முதல் நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment