Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 22, 2023

கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், ஜூன், 19ல் திறக்கப்படும் - உயர் கல்வித்துறை


தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், ஜூன், 19ல் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து வருகின்றன.

வரும் 29ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், ஜூன், 19ல் திறக்கப்படும் என, கல்லுாரி கல்வி இயக்குனர் கீதா அறிவித்துள்ளார்.

மேலும், கல்லுாரி மாணவர்களுக்கான 'செமஸ்டர்' தேர்வுகளை, கல்லுாரி முதல்வர்களே முடிவு செய்து, கோடை விடுமுறையை அறிவித்துக் கொள்ளவும், அவர் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment