Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 15, 2023

குரூப் - 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம்

'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் பதிவேற்றம், துவங்கியது.அரசு துறைகளில் வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளில், 10 ஆயிரத்து, 117 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஜூலையில் 'குரூப் - 4' தேர்வு நடந்தது.கடந்த மார்ச் 24ல் முடிவுகள் வெளியாகின.

தேர்ச்சி பெற்றவர்களில், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணிக்கு, ஒரு பதவிக்கு, 2.5 பேர் என்ற விகிதத்திலும்; மற்ற பதவிகளுக்கு 1:2 என்ற விகிதத்திலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், குரூப் - 4 தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் பதிவேற்றம், நேற்று துவங்கியுள்ளது. அரசு 'இ - சேவை' மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மே 5ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment