JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தமிழகத்தில் உள்ள நகராட்சிகளை தரம் உயர்த்துவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நகராட்சிகளை தரம் உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வரும் நிலையில் 5 நகராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நகராட்சிகளில் விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்,
கூடுவாஞ்சேரி ஆகிய இரண்டாம் நிலை நகராட்சிகள் முதல் நிலையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
அதேபோல் பூந்தமல்லி மற்றும் திருவள்ளூர் ஆகிய முதல் நிலை நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
மேலும் தேர்வு நிலை நகராட்சியாக உள்ள திருவேற்காடு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment