JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது ஜகர்நாத் மஹ்தோவுக்கு நுரையீரல் பாதிப்படைந்தது.
இதனால் சென்னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஜகர்நாத் மஹ்தோ. ராஞ்சியில் இருந்து விமானம் மூலம் ஜகர்நாத் மஹ்தோவை முதல்வர் ஹேமந்த் சோரன் சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தார். சென்னையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்த மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் சிகிச்சை பெற்ற அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ காலமாகிவிட்டார் என தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் புலி எனவும் ஜகர்நாத் மஹ்தோவுக்கு ஹேமந்த் சோரன் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment