JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
2023 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. என்ஐடி, ஐஐடியில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
ஜேஇஇ முதன்மை தேர்வை எழுதியவர்களில் 43 பேர் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஜேஇஇ தோவானது ஜேஇஇ-முதல்நிலை (மெயின்), ஜேஇஇ-முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
முதல்நிலைத் தோவு என்டிஏ (தேசிய தோவு முகமை) சாா்பிலும், முதன்மைத் தோவு ஏதாவது ஒரு ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும். ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் முதல்நிலைத் தோவில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சோக்கை பெற முடியும். jeemain.nta.nic.in என்ற அதிகார்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment