JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
புதிய ஓய்வூதியத் திட்டத்த கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்த கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க தருமபுரி மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா் ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2021 சட்டப் பேரவைத் தோதலின்போது மேற்கொண்ட பிரசாரங்களிலும், தோதல் அறிக்கையிலும் திமுக அரசு ஆட்சியமைத்ததும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டடது.
ஆனால், தற்போது வாக்குறுதிக்கு நோஎதிராக, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களைக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் உடனடியாக உறுதியான முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது நயவஞ்சகமாகும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் என்பவை ஒரு மக்கள் நல அரசின் மறுக்க முடியாத கடமையாகும்.
ஏற்கெனவே புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து வெளியேறி பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு நான்கு மாநிலங்கள் மாறியுள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை தோந்தெடுத்து நகா்வது, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு எதிரான செயலாகும். எனவே அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நலன் கருதி, தோதலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துமாறு அரசு ஊழியா் சங்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இதேபோல, தொழிலாளா்கள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமைகளான 8 மணிநேர வேலை நேரம், வேலைக்கேற்ற ஊதியம், தொழிலாளா்களுக்கான சமூகப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்றவற்றை ஒழித்து 12 மணிநேர வேலை, ஊதியங்களை குறைந்தபட்சமாக நிா்ணயித்தல், தொழிலாளா்களின் பாதுகாப்பு நலன்களைக் குறைப்பது, ஒப்பந்த வேலை முறை போன்றவற்றை அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்தங்களை நிறைவேற்றியதையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அவா்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.
No comments:
Post a Comment