JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பொதுவாக நம் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தோன்றும் .நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என்று இருவகை கொலஸ்ட்ரால் உண்டு .இதில் நல்ல கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு நன்மை செய்யும் .ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் தீமை செய்யும் .எனவே இந்த தீமை செய்யும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க வீட்டிலேயே தயாரிக்கும் ஒரு கஷாயம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.பின் அதில் சீரகம் சேர்த்து கொதிக்க விடவும்

2.பின் கொதிக்கும் சீரகத்தில் இஞ்சியை போட்டு நன்றாக கொதிக்க விடவும் . பின்னர் அது கொதிக்கும்போது எலுமிச்சையை சிறிதாக வெட்டி அதில் போட்டு முடிவிடவும்.
3.பின்னர் இந்த கலவையை குடிக்கும் பதத்திற்கு ஆற விட்டு ,வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.
4.பின்னர் அந்த நீரை வடிக்கட்டி சுவைக்கு தேன் சேர்த்து கொள்ளவும்.
5.இதனை மற்ற வேளையில் குடிப்பதை விட காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.
6.இதனை தொடர்ந்து குடிப்பதனால் கெட்ட கொழுப்பு எல்லாம் எளிதில் கரைந்து விடும் ,அதன் பின்னர் தொப்பை குறையும்.
7.இந்த கஷாயத்திற்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
8.இந்த கஷாயத்திற்கு மார்ப புற்றுநோய், கர்பப்பை புற்றுநோய், கணையப்புற்றுநோய் போன்ற கேன்சர் வரமால் காக்கும் ஆற்றல் உண்டு
9.இந்த கஷாயத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றலும் உண்டு .
10.இந்த கஷாயத்திற்கு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவும்.ஆற்றலும் உண்டு
11.இந்த கஷாயத்திற்கு மாரடைப்பு , இதய நோய் போன்றவற்றை குறைக்கும் சக்தி உண்டு .
No comments:
Post a Comment