JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வட்டி விகிதம் குறித்து அவ்வபோது புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தற்பொழுது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூத்த குடிமக்களுக்கான நிரந்தர வைப்புத்தொகை(Fixed Deposit) வைத்திருப்பவர்களுக்கு மேலும் 1% வட்டியை அதிகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வட்டியானது Wecare என்ற சிறப்பு திட்டத்தில் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நிரந்தர வைப்புத்தொகை(Fixed Deposit) செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிரந்தர வைப்புத்தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டிவிகிதமானது 6.5% சதவீதம் வழங்கப்படும் நிலையில் Wecare திட்டத்தில் 7.5% வட்டி வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் சேர கடைசி நாள் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment