JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி முத்துலட்சுமி, துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ரோசலின். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
வி.ஏ.ஓ.,இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.,சார்பில் குரூப் 4 தேர்வு 2022 ஜூலை 24 ல் நடந்தது. தேர்வு முடிவு மார்ச் 24 ல் வெளியானது. எங்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கப்பட்டது. விடைத்தாள் மதிப்பீட்டில் தவறு நடந்துள்ளது. உரிய மதிப்பெண் வழங்க வேண்டும். எங்களின் விடைத்தாள் நகலை (ஓ.எம்.ஆர்.,சீட்) வழங்க டி.என்.பி.எஸ்.சி., பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: தேர்வு நியமன நடைமுறைகள் முடிந்தபின், மனுதாரர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் நகல்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment