Thamizhkadal WhatsApp Channel

10, 11-ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடும் தேதியில் மாற்றம்..?

2022- 23 ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது.

குறிப்பாக ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கிய 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு, ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 10 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகள் வருகிற 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், 19ம் தேதி வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும். 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியாகும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், ஏப்ரல் 19ம் தேதி இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories