JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கும்.
ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூலை 2ம் தேதி என மாற்றப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ , மாநிலக் கல்வி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடைபெறும். பொதுப் பிரிவினருக்கு ஜூலை 7ம் தேதி கலந்தாய்வு தொடங்கும்.
பாலிடெக்னிக் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம். பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 3ம் தேதி தொடங்கும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு கலை, கல்லூரிகளில் சேர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பிக்கலாம்.அரசு கலை கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன.
மாணவர்கள் https://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக விரைவில் விண்ணப்பிக்க வேண்டும்,” என்று கூறினார். முன்னதாக அரசு கலை, கல்லூரிகளில் சேர்க்கை கலந்தாய்வு (கல்லூரி அளவில்) மே 25 முதல் ஜூன் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும், தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment