JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கருஞ்சீரகம் என்பது மருத்துவ குணங்கள் மிக்கது. இதற்கு ஆயுர்வேதத்திலும் சிறப்பான இடம் உண்டு.
தீராத இருமல், சளி என்பவற்றுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாக அமையும். வயிற்றுப் புண் உள்ளவர்கள் கருஞ்சீரகப் பொடியை நீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும்.
கருஞ்சீரகமானமது, கர்ப்பப்பையை சுத்தப்படுத்துவதில் மிகுந்த உதவியாக இருக்கும். அதாவது, குழந்தைப் பேறு அடைந்த பெண்களின் கர்ப்பப்பையில் அழுக்குகள் இருக்கும். எனவே அதனை தூய்மைப்படுத்துவதில் கருஞ்சீரகம் உதவி செய்கிறது.
கருஞ்சீரகத்தை சரக்கரை வியாதி உள்ளவர்கள் உட்கொண்டால் ரத்த சர்க்கரை அதிகரிப்பினால் ஏற்படும் பின்விளைவுகளை கட்டுப்படுத்தலாம்.

கருஞ்சீரகம் கணைய செயல்பாட்டை அதிகரிக்கிறது.
கருஞ்சீரகம் சிறுநீரக கற்களை கரைக்க உதவும். அதாவது. சுடுநீரில் தேனுடன் ஒரு கையளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்துகொள்ள வேண்டும். இதை குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.
கெட்ட கொலஸ்ட்ரோலை குறைத்து நல்ல கொலஸ்ட்ரோலை அதிகரிக்கின்றது. கொழுப்பினால் ஏற்படும் நோய்களை வராமல் தடுக்கிறது.
பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தை சேர்த்து பருகுவதனால் ஆஸ்துமா குணமாகும்.
இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த பொருளாகும். இது உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை அகற்ற உதவுகிறது.
இதனால் உடலிலுள்ள செல்கள் சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகின்றன. கருஞ்சீரகத்தை தினமும் உணவில் சேர்ப்பது புற்றுநோய் பராமல் விரட்டி அடிக்க உதவும்.
No comments:
Post a Comment