JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை தொடர்ந்து புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்றுள்ளார். இந்நிலையில், ஊடகத்துக்கு தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து தங்கம் தென்ன்னரசு அளித்துள்ள பதிலில், “அரசு ஊழியர்களின் நலனில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது”
ஓய்வூதிய திட்டம்
“பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசு குழு அமைத்துள்ளது. பல்வேறு சங்கங்களும் அரசிடன் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment