JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இந்திய ரூபாய் நோட்டுகளின் ஓரத்தில் சாய்ந்த நிலையில் கருப்பு நிற கோடுகள் இருப்பதை பார்த்திருப்போம்.
அந்த கோடுகள் எதற்காக தெரியுமா?
இந்தியாவின் கரென்சிக்கு பெயர் ரூப்யா, ரூபாய். ஒரு மனிதனுக்கு 3 முக்கிய அடிப்படைகள் தேவைகள் உள்ளன. அவை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு ஆகியவையாகும். இவை மூன்றும் நமக்கு வாங்குவதற்கு முக்கியத் தேவையாக பணம் இருக்கிறது.
அது போல் உயிர் வாழ அடிப்படை தேவை தண்ணீர் என்கிறோம். அந்த தண்ணீரை கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் கரென்சியை பயன்படுத்தி இவற்றை வாங்க வேண்டும்.
டிஜிட்டல் முறையை தவிர்த்து ஒவ்வொரு நாளும் பணத்தை தொடாமல் நாம் இருக்கவே முடியாது. கடந்த 2016 ஆம் ஆண்டுதான் ரூ 500, ரூ 1000 செல்லாததாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து புதிதாக ரூ 500, ரூ 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. எனவே தற்போது ரூ 1, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 ஆகிய நோட்டுகளை பயன்படுத்தி வருகிறோம்.
பணத்தை பொருத்தமட்டில் அதில் பாதுகாப்பு கருதி சில விஷயங்கள் இருக்கும். ரூபாய் நோட்டு போலியா அசலா என கண்டுபிடிக்க வெள்ளி இழைகள் ரூபாய் நோட்டினுள் செருகப்பட்டிருக்கும். அது போல் வெளிச்சத்தில் பார்த்தால் காந்தியின் படம் இருக்கும். சாதாரணமாக பார்த்தால் இருக்காது. மேலும் சீரியல் எண்கள் இருக்கும். இந்த சீரியல் எண்களை வைத்து கூட நிறைய குற்றங்களை போலீஸார் பிடித்திருக்கிறார்கள்.
அது போல் இந்த ரூபாய் நோட்டுகளின் ஓரத்தில் சிறியதாக கருப்பு நிறத்தில் சில கோடுகள் இருக்கும். அவை எதற்காகத் தெரியுமா? இந்த கோடுகள் எல்லா நோட்டுளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ரூபாய் நோட்டுகளின் மதிப்பிற்கேற்ப இந்த கோடுகளும் மாறியிருக்கும். இந்த கோடு சிலருக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கிறது.
ஆம் இதன் பெயர் ப்ளீட் மார்க்ஸ் ஆகும். ரூபாய் நோட்டுகளை பார்த்தவுடன் நாம் இத்தனை ரூபாய் என அதன் மதிப்பை அறிகிறோம். இதன் மூலம் கடையிலோ பேருந்திலோ யாராவது ஏமாற்றினால் கூட நாம் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால் பார்வையற்றவர்கள் எப்படி இந்த ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பர். அவர்களுக்காகவே இந்த ப்ளீட் மார்க்ஸ் போடபபட்டுள்ளது.
இந்த கோடுகள் ரூ 100 முதல் 2000 நோட்டுகள் வரை இருக்கும். அதாவது ரூ 100, ரூ 200, ரூ 500, ரூ 2000 ஆகிய 4 கரென்சி நோட்டுகளிலும் இந்த கோடுகள் இருக்கும். பார்வையற்றவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பை விரல்களை கொண்டு தேய்த்து பார்த்து கண்டுபிடிக்கிறார்கள். ஒவ்வொரு கோட்டுக்கும் அதற்கான மதிப்பு இருக்கும்.
ஒவ்வொரு நோட்டுக்கும் அதன் மதிப்புக்கு ஏற்ப கோடுகள் இருக்கும். நூறு ரூபாய் நோட்டாக இருந்தால் அதன் இரு புறமும் 4 கோடுகள்இருக்கும். இரு நூறு ரூபாய் நோட்டுகளிலும் 4 கோடுகள் இருக்கும். ஆனால் அந்த 4 கோடுகள் இரு கோடுகளாக பிரிந்து நடுவே இரு பூஜ்ஜியங்கள் இருக்கும். அது போல் 500 ரூபாய் நோட்டுகளில் 5 கோடுகளும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் 7 கோடுகளும் உள்ளன. இவற்றை கைகளால் தேய்த்து பார்த்து பார்வையற்றவர்கள் அதன் மதிப்பை யாருடைய உதவியும் இன்றி உணர்ந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment