THAMIZHKADAL TODAY NEWS

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு.! சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இந்த வருடத்திற்க ான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் மூலமாக நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு சென்ற வாரம் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெறுவதற்கு தயாராக இருந்தது.

இத்தகைய நிலையில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த சூழ்நிலையில், திடீரென்று சில நிர்வாக காரணங்களுக்காக, அது ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக சற்று முன் தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த கலந்தாய்வும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel