JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

இந்திய மக்களின் அத்தியாவசிய பயன்பாடுகளில் ஒன்றாகிவிட்டது ஆதார் அடையாள அட்டை. வங்கி பரிவர்த்தனை முதல் அனைத்துப் பயன்பாட்டிற்கும் இப்போது ஆதார் தேவைப்படுகிறது என்பதால் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்களில் ஒன்றாகிவிட்டது.
நீங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்களது அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே நீங்கள் ஆதார் அட்டையை வாங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், தற்போதுள்ள சான்றிதழ் படி புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிறது UIDAI.
இதன் படி நீங்கள் வருகின்ற ஜூன் 14, 2023 வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் நீங்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் அடையாளச் சான்று மற்றும் முகவரிச்சான்று போன்ற ஆவணங்கள் கொடுத்து புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதோ எப்படி என இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment