JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் நீங்கலாக மீதமிருந்த 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும், UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று இறுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
UPI வசதி கொண்டு வரப்பட்டதன்மூலம், தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றுள்ளன. மேலும் வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் NEFT, RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும். தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 நியாயவிலைக் கடைகள், கூட்டுறவு மருந்தகங்கள், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலை உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் பணமற்ற பரிவர்த்தனை சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது படிப்படியாக, மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment