Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 27, 2023

இனி போன் நம்பர் வேண்டாம்.. வாட்ஸ் அப் கொண்டு வரும் புதிய அப்டேட்..

நாம் ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற பல சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.

பெரும்பாலான வலைதளங்களில் நாம் இமெயில் மற்றும் ஃபோன் மூலமாக சைன் அப் செய்திருந்தாலும் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள தனித்துவமான யூஸர்நேம் உருவாக்கிக் கொள்ள முடியும்.


ஆனால், வாட்ஸ் அப்-ஐ பொருத்தவரையில் நாம் நம்முடைய ஃபோன் நம்பரில் தான் இயங்கியாக வேண்டும். நம் நட்பு வட்டத்தில் நம் ஃபோன் நம்பர்களை ஏற்கனவே சேமித்து வைத்திருப்பார்கள் என்றாலும், பல தரப்பினரும் உள்ள குரூப்களில் நம் நம்பர் நேரடியாக தென்படுவதால் நமது தனியுரிமை பாதுகாப்பு குறித்து கேள்வி எழுகிறது. இந்த நிலையில், வாட்ஸ் அப்-பிலும் யூஸர்நேம் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான அப்டேட் வர இருப்பதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுகுறித்து WABetaInfo நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஆண்டிராய்ட் தளத்தில் இயங்கக் கூடிய சமீபத்திய வாட்ஸ் அப் அப்டேட் வெர்சன் 2.23.11.15 பான்படுத்தியபோது, முக்கியமான வசதி ஒன்று மேம்படுத்தப்பட்டு வருவதை நாங்கள் கண்டறிந்தோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப் செட்டிங்ஸ் மூலமாக யூஸர்நேம் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான சிறப்பு வசதி குறித்து ஸ்கிரீன்சாட் பதிவு ஒன்றை WABetaInfo பகிர்ந்துள்ளது. பயனாளர்கள் செட்டிங்க்ஸ் பக்கம் சென்று இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.


யூஸர்நேம் ஒன்றை தேர்வு செய்து கொள்வதன் மூலமாக பயனாளர்கள் தங்களை தொடர்பு கொள்வதற்கான வசதிகளில் ஃபோன் நம்பரை நீக்கிக் கொள்ள முடியும். அதேபோல எளிதில் நினைவுகூரத்தக்க யூஸர்நேம் ஒன்றை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.


ஒரு யூஸரின் ஃபோன் நம்பரை தெரிந்து கொள்ளாமலேயே, அவர்களின் யூஸர்நேம் உள்ளீடு செய்து வாடிக்கையாளர்கள் பிறரை தொடர்பு கொள்ள முடியும் என்று WABetaInfo நிறுவனம் தெரிவிக்கிறது. யூஸர்நேம் வசதி எப்படி செயல்படும் என்பது முழுமையாக தெரியாமல் இருந்தாலும், யூஸர்நேம் வாயிலாக நடைபெறக் கூடிய உரையாடல்களுக்கும் எண்டு-டூ-என்கிரிப்ஷன் பாதுகாப்பு வசதி கிடைக்கும் என்று உறுதியாகக் கூறப்படுகிறது.


யூஸர்களின் தனியுரிமை மற்றும் டேட்டா பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் கருதி இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. யூஸ்ர்நேம் பயன்படுத்தும் வசதி இப்போது வரையில் பரிசோதனை நிலையில் தான் உள்ளது. எனினும் ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி வெகு விரைவில் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.


குரூப் செட்டிங்க்ஸ் தொடர்பில் புதிய வசதிகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவாகியுள்ளன. இந்த வசதிகள் தற்போது ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. இந்த புதிய வசதியின்படி, செட்டிங்க்ஸ் மெனுவில் ஒவ்வொரு புதிய வசதிக்கும் புதிய விண்டோவுக்கு நீங்கள் செல்ல வேண்டியிருக்காது. அதற்குப் பதிலாக அதே விண்டோவில் டாகிள் செய்வதன் மூலமாக இந்த வசதியைப் பெறலாம்.

No comments:

Post a Comment