Join THAMIZHKADAL WhatsApp Groups
10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு வகுப்புகள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த வகுப்புகளில் மாணவர்களின் பாட சம்மந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment