Breaking

Wednesday, June 28, 2023

மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை


மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கல்கி கிருஷ்ணமுர்த்தி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் எஸ். சந்திரமவுலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எழுத்தாளர் அமரர் கல்கியின் பெயரில் இயங்கி வரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு கல்விஉதவித்தொகை வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2023-2024-ம் கல்வியாண்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.kalkionline.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை மாதம் 31-ம் தேதி ஆகும்.

No comments:

Post a Comment