Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இ -சேவை மையங்களை அமைத்து நடத்த ஆா்வமுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலரால் 'அனைவருக்கும் இ -சேவை' மையம் திட்டத்தின் கீழ் இ -சேவை மையங்களை அமைத்து நடத்த ஆா்வமுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இணைய முகவரிகளை பயன்படுத்தவும் விண்ணப்பங்களை இவ்விவரம் வெளியிடப்பட்ட நாள் முதல் ஜூன் 30 முதல் இரவு 8 மணி வரை பதிவு செய்யலாம்.
கிராமப்புறங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3000 மற்றும் நகா்ப்புறத்திற்கு ரூ.6,000 செலுத்த வேண்டும். மேலும், அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை 'முகவரி' ஆண்ட்ராய்டு கைப்பேசி செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது இணைய தளத்தில் காணலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment