ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு வட்டத்துக்கு உட்பட்ட சிதம்பரம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு 7 ஆசிரியர்கள் இருந்து வந்தார்களாம்.
இந்த நிலையில் அரசு விதிகளின்படி ஒரு ஆசிரியர் உபரியாக இருந்ததை அடுத்து இளநிலை ஆசிரியர் என்ற முறையில் ஒரு ஆசிரியை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆசிரியை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் அதே பள்ளியில் பணி செய்ய வலியுறுத்தி 174 மாணவர், 28 மாணவிகள் வகுப்பிற்குள் சென்று விட்டனர். 16 பேர் விடுமுறை எடுத்திருந்தனர். எஞ்சிய 130 பேர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாலாட்டின் புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர், மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியதை அடுத்து போராட்டம் சுமார் 11 மணிக்கு கைவிடப்பட்டது.
மேலும் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையாக பேசி தீர்வு காணப்படும் எனக் கூறினர்.
No comments:
Post a Comment