சர்க்கரை நோய் குறைவதற்கு தினமும் இதனை குடித்தால் போதும்.நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய் ஆகும்.
டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், உணவு பழக்கத்தின் மூலமாகவே எளிதில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரை நோயில் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவ குறிப்புக்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள்.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் அது சர்க்கரை நோய்க்கான ஒரு வகை அறிகுறியாக கூட இருக்கலாம். அதே போல அடிக்கடி தாகம் எடுத்தாலும் அதுவும் சர்க்கரை நோயின் அறுகுறியாகவே பார்க்கப்படுகிறது.
கண் பார்வை மங்களாவது, உடல் எடை குறைவது, அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவது, உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக அதிக நாட்கள் எடுத்துக்கொள்வது போன்ற பல அறிகுறிகளை வைத்து சர்க்கரை நோய் இருப்பதை உணரலாம்.
ஒவ்வொருவருக்கும் இதில் சில அறிகுறிகளோ, பல அறிகுறிகளோ அல்லது வேறு சில அறிகுறிகளோ கூட இருக்கலாம்.எனவே இந்த சக்கரை நோயை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.
தேவையான பொருட்கள்:
கொய்யா இலை
சீரகம்
வெந்தயம்
தண்ணீர்
செய்முறை:
1: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து பின்பு 5 கொய்யா இலையை சிறை துண்டுகளாக எடுத்து அந்த தண்ணீரில் சேர்க்க வேண்டும். அந்த தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வேண்டும்.
அதாவது ஒரு கிளாஸ் தண்ணீரின் அளவு அரை கிளாஸ் தண்ணீரின் அளவாக வரும் வரை கொதிக்க வேண்டும். அந்தத் தண்ணீரின் நிறம் மாறும் வரை கொதிக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை நாம் உணவு எடுத்து கொண்ட பிறகு சாப்பிட வேண்டும். ஏனெனில் இப்படி குடித்து வந்தால் சாப்பாட்டில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும்.
இதேபோன்று 12 வாரம் இதனை தொடர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுத்த வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் இந்த கொய்யா இலை நீரை குடிக்க வேண்டாம்.
No comments:
Post a Comment