குடல்புண் குணமாக
வயிற்றில் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப்பொருட்களும் அரிப்பதன் காரணமாக 'குடல்புண்' (அல்சர்) ஏற்படுகிறது.
இந்த குடல்புண் குணமாக பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
மட்டுமல்லாது பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளர செய்து புண்ணை ஆற்றி விடக்கூடிய சக்தி இந்த பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
நீரிழிவு குணமாக
நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு மருந்தாகும். ஏனென்றால், பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிகமாகி உள்ளதால், இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது.
இரத்த ஓட்டம் சீராக
இரத்தம் சம்பந்தமான பல பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. பச்சை வாழைப்பழம், இரத்த ஓட்டம் சீராக அமையவும், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் உதவுகிறது.
பற்கள்
பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பற்களுக்கு தேவையான கால்சியம் சத்து இந்த பச்சை வாழைப்பழத்தில் உள்ளது. இதை சாப்பிட்டால் பற்கள் உறுதியாகும்.
மலசிக்கல்
பச்சை வாழைப்பழம் மலச்சிக்கலை நீக்கும். இது குளிர்ச்சியை தர கூடியது. மலசிக்கல் உடையவர்கள் இதை சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சிக்கு பின்பு ஒரு சில பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சிக்கு பின், பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
உடல் எடை
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். பச்சை வாழைப்பழத்தில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளதால், இதை தொடர்ந்து சாப்பிட்டாலே போதும்.
குறிப்பு
ஆஸ்துமா மற்றும் வாத நோயாளிகள் இதை தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment