பான் - ஆதார் இணைப்பதில் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று வருமான வரித்துறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.ஒருவரின் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வரி ஏய்ப்பை தடுக்க உதவும் என வருமான வரித்துறை தெரிவிக்கிறது. ஏற்கனவே பான் எண்ணை ஆதாருடன் இணைக்க பலமுறை அவகாசம் கொடுத்தும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காதோர் எண்ணிக்கை கணிசமாக இருந்தது.
இதனால் கடந்த மார்ச் மாதம் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை வருமான வரித்துறை நீட்டித்தது. அதோடு கடந்த மார்ச் 31-க்கு பிறகு விண்ணப்பிப்போருக்கு ரூ.1000 அபராதமும் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.
அதன்படி, ஆதாருடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி நாளாகும். இதற்குமேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், பான் கார்டை - ஆதாருடன் இணைக்காதவர்கள் இன்று இணைத்து வந்தனர். இதில் சில பிரச்னைகள் ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வருமான வரித்துறை நிர்வாகம் அதுகுறித்து விளக்கமளித்துள்ளது.



No comments:
Post a Comment