Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு பள்ளிகளில் நீண்ட நாள் பணிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்குமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், மாவட்டந்தோறும் குறைந்தபட்சம், 100 பேராவது அவ்வப்போது, தகவல் அளிக்காமல், நீண்ட நாள் விடுப்பு எடுப்பதும், பின் பணிக்கு வருவதுமாக உள்ளது தெரிய வந்து உள்ளது.
சில ஆசிரியர்கள் எந்த தகவலும் இன்றி, ஆண்டுக்கணக்கில் விடுப்பு எடுத்து விட்டு, சம்பளம் மட்டும் பெறுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் வந்துள்ளதால், மாவட்டந்தோறும், நீண்ட நாள் விடுப்பு எடுத்தவர்களை களையெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் வழியே, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதில், பள்ளிகளில் நீண்ட நாள் பணிக்கு வராமல், தகவலும் அளிக்காமல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விபரங்களை, முதன்மை கல்வி அதிகாரிகள் சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment