Monday, July 3, 2023

DEO நியமன விதிமீறல்; ஆசிரியர்கள் அதிருப்தி

தமிழக பள்ளிக்கல்வி துறையில், கடந்த 30ம் தேதி பணி ஓய்வு பெற்ற, ஐந்து மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்களை பொறுப்பு அதிகாரிகளாக நியமித்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.

அதில், ஒரு காலியிடத்துக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், மற்ற நான்கு இடங்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:

பள்ளிக்கல்வித் துறையின் பணி விதிகளின்படி, மாவட்ட கல்வி அலுவலரான டி.இ.ஓ., பதவி என்பது, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு இணையான பதவி. காலியிடம் ஏற்படும்போது, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கே பொறுப்பு வழங்க வேண்டும்.

இதற்கு மாறாக, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நான்கு பேர், டி.இ.ஓ., பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளது, விதிமீறலை காட்டுகிறது. எனவே, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர், அரசாணைப்படி பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News