Saturday, August 12, 2023

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 17ம்தேதி துறை மாறுதல் கவுன்சலிங்

பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற துறைகளில் பணியாற்றி வரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு அலகுவிட்டு அலகு மாறுதல் மற்றும் துறை மாறுதல் ஆகியவற்றின் மூலம் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்ற உரிய தடையில்லா சான்று பெற்று மாறுதல் மூலம் பணியாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கவுன்சலிங் நடப்பதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

மேற்கண்ட அலகுவிட்டு அலகு மாறுதல், துறை மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை இஎம்ஐஎஸ் இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கவுன்சலிங் நடக்க இருக்கிறது. 

கவுன்சலிங் நாளில், மாறுதல் கேட்டு விண்ணப்பித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ள உரிய அறிவுரைகள் பள்ளிக்கல்வித்துறை மூலம் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி, அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியல்கள் 11ம் தேதி வெளியிடப்படும். முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருந்தால் பதிவேற்றம் செய்வது 14ம் தேதியும், விண்ணப்பங்களின் பேரில் இறுதி முன்னுரிமைப் பட்டியல்கள் 16ம் தேதி வெளியிடப்பட்டு, கவுன்சலிங் 17ம் தேதி நடக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News