Saturday, August 5, 2023

எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு பொது கலந்தாய்வில் 20,083 மாணவர்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான பொது கலந்தாய்வில் 20 ஆயிரத்து 83 பேர் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் விருப்ப இடங்களை தேர்வு செய்து உள்ளனர்.


கடந்த மாதம் 25ம் தேதி முதல் நடந்து வரும் பொதுகலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு, அது நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிந்தது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு விண்ணப்பித்த 25 ஆயிரத்து 856 மாணவ, மாணவிகளும், நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு விண்ணப்பித்த 13 ஆயிரத்து 179 மாணவ, மாணவிகளுக்கும் கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, கலந்தாய்வில் பங்குபெற்று விருப்ப இடங்களை 20 ஆயிரத்து 83 மாணவ, மாணவிகள் தேர்வு செய்துள்ளனர்.

அதாவது, தகுதியுள்ளவர்களாக அழைக்கப்பட்ட 39 ஆயிரத்து 35 பேரில், 20 ஆயிரத்து 83 பேர் மட்டுமே அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் விருப்ப இடங்களை தேர்வு செய்து இருக்கின்றனர். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், விருப்ப இடங்களை தேர்வு செய்தவர்களுக்கான இடஒதுக்கீடு செயல்பாட்டு பணிகள் இன்று (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து இடஒதுக்கீடு இறுதி முடிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட உள்ளது. இதை சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து, அந்தந்த கல்லூரிகளில் வருகிற 11ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும். அவ்வாறு சேராத இடங்கள் அனைத்தும் 2ம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும். அதுதொடர்பான அறிவிப்பை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிடும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News