Tuesday, August 1, 2023

மக்களே.! இன்று முதல் அமலுக்கு வரும் 4 புதிய மாற்றங்கள்.! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.!

மாதத்தின் தொடக்க நாள் என்பதால் இன்று முதல் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு உள்ளன. அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும். இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் விலையினை பொறுத்து மாற்றம் இருக்கலாம். 

இது நேரடியாக சாமானியர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. 

கடந்த சில மாதங்களாகவே வணிக ரீதியிலான சிலிண்டர் விலை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்குமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

காசோலை தொடர்பான விதிமுறைகளை பாங்க் ஆப் பரோடா மாற்றி உள்ளது. அதன்படி 5 லட்சம் மற்றும் அதற்கு மேலான காசோலைகள் செலுத்துவதற்கு வங்கியால் நேர்மறை ஊதிய முறை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு பல்வேறு பணிகளுக்காக செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள், வங்கிகள் இந்த மாதத்தில் அரசு விடுமுறைகளுடன் இந்த மாதத்தில் வங்கிகள் 14 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாத வரி செலுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இன்று முதல் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும். காலக்கெடுவிற்குள் வருமான வரியை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு டிசம்பர் 31, 2023 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கு 1961ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் கீழ் 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள வருமான வரி செலுத்துவோருக்கு அபராதம் ரூ.1,000 ஆக உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News