Saturday, August 5, 2023

ஏகலைவா பள்ளி ஆசிரியர் பணி 4 ஆண்டு பி.எட்., படிப்பு செல்லும்

தேசிய கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ., உத்தரவின்படி, 4 ஆண்டு கால பி.எட்., படிப்பு, பல கல்வி நிறுவனங்களில் துவங்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இளநிலை பட்டப்படிப்புடன், பி.எட்., படிப்பையும் இணைந்து படிப்பர்.

இந்த படிப்புக்கு ஒவ்வொரு மாநிலமும், அரசு வேலைக்கான அங்கீகாரம் அளித்து வருகின்றன. பழங்குடியின மாணவர்களுக்கு நடத்தப்படும், 401 ஏகலைவா உண்டு, உறைவிட பள்ளிகளில், 4,062 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தேசிய பழங்குடியினர் நலத்துறை சார்பில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், இரண்டாண்டு பி.எட்., படிப்பு மட்டும் படித்தவர்கள் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கைக்கு முன்பே, 4 ஆண்டு பி.எட்., படிப்பை ஏற்கனவே அறிமுகம் செய்து நடத்தியுள்ளதாக, ஒரு சில கல்லுாரிகள் சார்பில், மத்திய கல்வித்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து, தேசிய கல்வியியல் கவுன்சிலின் உத்தரவின்படி, 4 ஆண்டு பி.எட்., படிப்பு முடித்தவர்களும், ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என, தேசிய பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது. 

இதையொட்டி, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், வரும், 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விபரங்களை, https://tribal.nic.in/Home.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News