குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும் மேஷ ராசியில் அமர்ந்துள்ள குரு பகவானால் அனைத்து ராசிக்காரர்களுக்குமே நன்மைதான் நடக்கப்போகிறது.
ராகு உடன் இணைந்துள்ள குரு பகவானால் சில யோகங்களும் அதனால் நன்மைகளும் ஏற்படுகின்றன.
குரு பகவான்: குரு பகவான் தனுசு மற்றும் மீனம் ராசியில் ஆட்சி பெறுகிறார். கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமடைகிறார். மேஷம், சிம்மம், கடகம், விருச்சிகம் ராசிகள் குருவிற்கு நட்பு வீடு. ரிஷபம் மிதுனம், கன்னி, துலாம் குருவிற்கு பகை வீடுகள். குரு பகவான் சந்திரன் வீடான கடகத்தில் உச்சம் பெறுகிறார். சனியின் வீடான மகரத்தில் நீசமடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு யோகங்கள் கிடைக்கப் போகின்றன. குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் சிம்ம ராசியையும், ஏழாம் பார்வையால் துலாம் ராசியையும், ஒன்பதாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். இந்த முன்று ராசிகளைத்தவிரமேஷ ராசிக்கு லாப குருவும், மீனம் ராசிக்கு குடும்ப குருவும் குதூகலத்தை தரப்போகிறார் குரு பகவான்.
செல்வ வளம் தரும் யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் குரு ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் இருந்து ராகு ஆறாமிடத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் அமைவதாக ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. ஆறாமிடத்தில் அசுபக் கிரகமான ராகு இருப்பதால் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் கெட்ட ஆதிபத்தியங்களான கடன், நோய், எதிரி ஆகியவை ஒழிக்கப்பட்டு அந்த பாவம் ஜாதகருக்கு சுப விஷயங்களைச் செய்யும் என்பது ஜோதிட விதி.
ஹம்ச யோகம்: குரு ஹம்ச யோகம் தரும் நிலையில் அவருக்கு எதிர்த் தன்மையுடைய கிரகங்களான சுக்ரன், சனி, புதன் ஆகியோருடன் சேருவது, இவர்கள் குருவைப் பார்ப்பது யோகத்தைக் குறைத்து விடும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் இன்னும் வலுப்பெறும். அது தவிர இப்போது குரு ராகு சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்ட லட்சுமி யோகம் தேடி வந்துள்ளது.
மிதுனம்: குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். லாப குரு செய்யும் தொழிலில் லாபங்களை அள்ளித்தருவார். இதுநாள் வரை பொன் பொருட்களை சேர்க்காதவர்கள் கூட லாபகரமான வசதி வாய்ப்புகளை தருவார். உங்களுக்கு யோகம் கை கூடி வரப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியால் வரப்போகும் யோகங்களை அனுபவிக்கத் தயாராகுங்கள். உங்களுடைய ராசிக்கு முன்று, ஐந்து, ஏழாம் வீடுகளை குரு பார்ப்பதால் திருமண யோகம் கைகூடி வருகிறது. புத்திரபாக்கியம் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அஷ்ட லட்சுமி யோகத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
சிம்மம்: ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்று சொல்வார்கள். சிம்மம் ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தானாக தேடி வரும் பாக்கியங்கள் உங்களை தேடி வரும். பதவிகளும் பட்டங்களும் தேடி வரும். வேலை, தொழில் வருமானம் திருமணம் குழந்தை பாக்கியம், வெளிநாட்டு யோகம் என அனைத்திற்கும் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது அதை அனுபவிக்க தயாராக இருங்கள். அது தவிர குருபகவான் ஐந்தாம் பார்வையாக சிம்மம் ராசியை பார்ப்பதால் பிள்ளைகளுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை மூலம் வருமானம் கிடைக்கப் போகிறது. தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும். குருவினால் கிடைக்கும் பலனை திகட்ட திகட்ட அனுபவிக்க தயாராகுங்கள். 50 ஆண்டுகளுக்குப் பிறகு அற்புதமான குரு பெயர்ச்சி. அதிர்ஷ்ட தேவதை வீடு தேடி வரப்போகிறாள்.
துலாம்: களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து குரு பகவான் உங்கள் ராசியை நேரடியாக பார்வையிடுகிறார். குரு பகவான் பார்வை துலாம் ராசியின் மீது நேரடியாக விழுகிறது. அபரிமிதமான பண வருமானம் வரும். கடன்கள் அடையும். ஆசைகள் நிறைவேறும். தடைகள் நீங்கும். மனதில் திருப்தியாக இருப்பீர்கள். முயற்சி வெற்றி பெறும். வெளிநாட்டு யோகம் கை கூடி வரும். நல்ல வேலை கிடைக்கும். குருவின் பார்வையால் பெரியவர்களின் வாழ்த்துக்கள் ஆசிகள் கிடைக்கும். வேண்டிய வரங்களை கடவுள் கொடுப்பார். பணவரவும் லாபங்களும் கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். சொத்துக்கள் சேரப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியால் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் கோடீஸ்வர யோகம்தான்.
தனுசு: ஐந்தாம் இடத்தில் அமரும் குருபகவான் பூர்வ புண்ணிய பலன்களை அள்ளித்தரப்போகிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியினால் மிதமிஞ்சிய பலன் கிடைக்கும். எதிர்பார்ப்பு அதிகமாகவே நிறைவேறும். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு யோகம் வரும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். அற்புதமான குருப்பெயர்ச்சியாக அமைந்துள்ளது. எதுவுமே நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தால் நமக்கு அதிக லாபம்தான். அப்படித்தான் இந்த குரு பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகிறது. காரணம் குரு தனது ஒன்பதாம் பார்வையால் தனுசு ராசிக்காரர்களை பார்க்கிறார். ஐந்தாம் பார்வையால் பாக்ய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், குரு பார்வையிடுவதால் உங்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும் வருமானம் கூடும்.
மீனம்: இரண்டாம் வீடு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம். எப்பவுமே குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமரும் போது அந்த குடும்பத்தை சுபிட்சமடையச் செய்வார். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். நிறைய பண வரவு வரும். மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் குடும்பம் மேன்மையடையும். சுப நிகழ்ச்சிகள், திருமணம் நடைபெறும். குழந்தைகள் கல்வியில் மேன்மையடைவார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் பார்வை மீனம் ராசிக்காரர்களுக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுவதால் தொழில் வருமானம் பெருகும், புதிய வேலை கிடைக்கும். நோய்கள் குணமடையும். இதுநாள்வரை பட்ட அவமானங்கள் தீரும் காலம் வந்து விட்டது.
No comments:
Post a Comment