மாதச்சம்பளம் பெறும் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்ப்பித்து வருமானவரி விலக்கு பெறுவது பரவலாக நடந்து வரும் நிலையில், மத்திய அரசு புதிய அதிரடியை கையில் எடுத்துள்ளது.
வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.
வரிஏய்ப்பு: ஆனால், சிலர் வரி ஏய்ப்பு செய்துவிடுகிறார்கள்.. அதனால்தான், வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.. அதன்படி, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசும் வழங்கப்படுகிறது. அதாவது, பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படுகிறது.
ஒருவர் சட்டவிரோதமான முறையில் வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்து, அவர் வரி ஏய்ப்பில் ஈடுபட நேர்ந்தால் அது குறித்து தகவல் அறிந்தவர்கள் வருமானவரித் துறையிடம் தாராளமாக தகவல் தெரிவிக்கலாம்.
வருமானவரி: எனினும், வரிஏய்ப்பு செய்வோரை நேரடியாகவே கண்டறிய மத்திய அரசு அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, வருமான வரித் துறை புதிய சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியிருக்கிறது..
அதாவது, வருவத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள், வருமான வரி செலுத்த தேவையில்லை. மொத்த வருவாயில் இருந்து வீட்டு வாடகை, நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை கழிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வீட்டு வாடகை அளவு, வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், ரசீதுகளில், வீட்டு உரிமையாளரின் பான் கார்டு நம்பரை தரதேவையில்லை என்ற விதிமுறை உள்ளது.
போலி ரசீதுகள்: மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடக்கிறது.
இதைத்தான் கண்டறிய மத்திய அரசு முயன்றுள்ளது. அப்படி கண்டறிந்து அவர்கள் மீது 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும், புதிய சாப்ட்வேர் ஒன்றை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏராளமானவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவததாக தகவல் வெளியாகியுள்ளது.
சாட்டையடி: இந்த புதிய முறையில், வருடத்திற்கு 7 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு தரப்படுகிறது.. ஆனால் வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு இந்த முறையில் தள்ளுபடி பெற முடியாது. ஆக, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளக்காரர்களை கண்டறியும் வகையில் புதிய சாஃப்ட்வேரை வருமான வரித்துறை உருவாக்கி உள்ளதால், போலி ரசீதை கொடுத்து தப்பிக்க முடியாத நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment