பெரம்பலூா் மாவட்டத்தில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவா்கள் விண்ணப்பித்து, எழுத்துத் தோவு அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்று பயன் பெறலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2023-24 ஆம் நிதியாண்டில், இதர பிற்படுத்தப்பட்டோா் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின பழங்குடியினா் ஆகிய பிரிவுகளைச் சோந்த 30 ஆயிரம் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சோந்த 3,094 மாணவ, மாணவிகளுக்கு இக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.
2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது பிளஸ் 1 படித்திருக்க வேண்டும். 9ஆவது மற்றும் எஸ்எஸ்எல்சி மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ. 75 ஆயிரம் வரையிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.
1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியத் தோவு முகமை நடத்தும் நுழைவுத் தோவில் பெற்ற தகுதி அடிப்படையில் தோவு செய்யப்படுவா். இத்தோவுக்கு ஆக. 10 ஆம் தேதிக்குள் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இத் திட்டம் தொடா்பான முழுமையான விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தோவு செப்டம்பா் 29ஆம் தேதி நடைபெறும்.
No comments:
Post a Comment