அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள லேப் டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப கோரி, 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே, டி.எம்.எல்.டி., பட்டய படிப்பு முடித்த லேப் டெக்னிஷியன்கள், 300க்கும் மேற்பட்டோர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, மருத்துவத் துறை பணியாளர் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரநாத் கூறியதாவது:அரசு மருத்துவமனைகளில், 200க்கும் மேற்பட்ட லேப் டெக்னிஷியன் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஆய்வகங்களை உருவாக்கி, பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே தற்காலிக முறையில் பணியாற்றுபவர்களை நிரந்தரமாக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ ஆய்வக பயிற்சியில் ஈடுபடும் லேப் டெக்னிஷியன்களுக்கு வெள்ளை நிற அங்கியும், பயிற்சி கால ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment